வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(செப்.,3ம் தேதி, செவ்வாய்கிழமை) ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் சரிந்து ரூ.66.50-ஆக இருந்தது. தொடர்ந்து மதியம் 01.45 மணியளவில் ரூ.67.68-ஆக சரிந்தது. முன்னதாக நேற்று வர்த்தகநேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ.66.00-ஆக இருந்தது.
இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், யூரோ மற்றும் யென்னுக்கு எதிரான டாலர் மதிப்பு உயர்ந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்