ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.67.68

வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(செப்.,3ம் தேதி, செவ்வாய்கிழமை) ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் சரிந்து ரூ.66.50-ஆக இருந்தது. தொடர்ந்து மதியம் 01.45 மணியளவில் ரூ.67.68-ஆக சரிந்தது. முன்னதாக நேற்று வர்த்தகநேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ.66.00-ஆக இருந்தது.

இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், யூரோ மற்றும் யென்னுக்கு ‌எதிரான டாலர் மதிப்பு உயர்ந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்

ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், முக்கிய இடங்களில் உள்ள, ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறக்க,"டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என, ஐந்து மண்டலங்களில், மொத்தம், 6,838 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகின்றன.உள்நாட்டில் மதுபான ஆலை கொண்டுள்ள நிறுவனங்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்து, சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, அவற்றை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்கின்றன. இந்த மது வகைகளுக்கு என, தனி வாடிக்கையாளர்கள் உள்ளதால், மற்ற மது வகைகளை காட்டிலும், இவற்றின் விலை சற்று, கூடுதலாக இருந்தாலும், அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.தமிழகத்தில், பன்னாட்டு, ஐ.டி., நிறுவனங்களின் வருகையால், சுற்றுலா பயணிகள் வருகை, கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில், "ஷாப்பிங் மால்' அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டு வருகின்றன.இதையடுத்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், ஷாப்பிங் மால்களில், பார் வசதி இல்லாமல், மதுபான கடைகளை மட்டும் திறக்க, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நவீன வசதிகளுடன் கடைகள்: இது குறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:முதல் கட்டமாக, சென்னையில் உள்ள, "எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ், சிட்டி சென்டர்' ஆகிய ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த கடைகள், பார் வசதி இல்லாமல், நவீன வசதிகளை உள்ளடக்கியதாக திகழும்.இங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது வகை மற்றும் பிரீமியம் ரகம் உள்ளிட்ட சிறப்பு மது வகைகள் விற்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டணம் விவரம்: விரைவில் அறிமுகப்படுத்த முடிவு

மின் நுகர்வோருக்கு, மின் கட்டண விவரங்களை, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்த, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், வீடு, 1.63 கோடி; விவசாயம், 20.30 லட்சம்; வணிக பயன்பாடு, 33 லட்சம்; தொழிற்சாலை, 5.77 லட்சம் என, மொத்தம், 2.44 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். மின் கட்டணம் குறித்த விவரம், கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 நாட்களுக்குள் கட்டணத் தொகையை பணம், காசோலை, வரைவோலை ஏதேனும் ஒன்றின் வாயிலாக செலுத்த வேண்டும். மின் வாரிய ஊழியர்கள், மின் கட்டணத் தொகை கணக்கெடுப்பதற்கு வீடு, நிறுவனங்களுக்கு செல்லும் போது, பெரும்பாலான நுகர்வோர், வீடுகளில் இருப்பதில்லை. இதனால், மின் பயன்பாடு மற்றும் மின் கட்டணம் குறித்த தகவலை, நுகர்வோர் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக, உரிய காலத்திற்குள் கட்டணத்தை செலுத்த தவறி விடுகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டணத்தை, நுகர்வோருக்கு தெரியப்படுத்த, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் படி, மின் பயன்பாடு, கட்டணம் மற்றும் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள், எஸ்.எம்.எஸ்.,ல் இடம் பெற்றிருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, மின் இணைப்பு பெற விண்ணப்பித்த போது, மொபைல் போன் எண் கொடுத்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., சேவை வழங்கப்பட உள்ளது. மொபைல் எண் தெரிவிக்காதவர்கள், மின் கட்டணம் செலுத்துவதற்கு, துணை மின் நிலைய அலுவலகங்களுக்கு செல்லும் போது, நுகர்வோரிடம் இருந்து, மொபைல் போன் எண் பெறப்பட்டு, பின் தெரிவிக்கப்பட உள்ளது.

கட்டணம் இல்லை:
 இதுகுறித்து, மின் வாரிய ஊழியர் ஒருவர் கூறியதாவது: ஆறு மாதத்திற்கு முன், எஸ்.எம்.எஸ்., மூலம், நுகர்வோருக்கு, மின் கட்டணத்தை தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், எஸ்.எம்.எஸ்., கட்டணத்தை உயர்த்தியதால், இத்திட்டத்தை அப்போது செயல்படுத்த முடியவில்லை. எஸ்.எம்.எஸ்., சேவைக்காக நுகர்வோரிடத்தில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி விரைவாக நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு குறைந்தது

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வாரத்தின் துவக்க நாளான திங்களன்று சரிவைக் கண்டது.கடந்த வாரம், வர்த்தக இறுதி நாளான வெள்ளியன்று, ரூபாய் மதிப்பு, 65.70 ஆக இருந்தது. இந்நிலையில், அன்னியச் செலாவணி சந்தையில், நேற்று வர்த்தகம் துவங்கியதும், ரூபாய் மதிப்பு, 14 கா”கள் சரிவடைந்து, 65.84 ஆக, காணப்பட்டது. இது, வர்த்தகத்தின் இடையே, 65.84 - 66.15 என்ற அளவில், ஏற்ற, இறக்கமாக இருந்தது.இருந்த போதிலும், வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, 32 கா”கள் குறைந்து, 66.02ல் நிலை பெற்றது.உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எழுச்சி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதிக்கு பிறகே, சிரியா போர் நடைபெறும் என்பதால், கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தது போன்றவற்றுக்கு இடையிலும், நேற்று ரூபாய் மதிப்பு குறைந்தது.வங்கிகளும், இறக்குமதி நிறுவனங்களும் அதிக அளவில் டாலரை வாங்கியதால், ரூபாய் மதிப்பு குறைந்தது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.